திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (18:27 IST)

பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் அடிதடியா? ஹாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

harry
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் இளவரசர் ஹாரி தலைப்பில் வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி வெளியிடவுள்ள புத்தகம் ஒன்று ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த புத்தகத்தை விளம்பரப்படுத்தும் விதமாக சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஹாரி பங்கேற்று வருகிறார். 
 
இந்த நிலையில் ஹாரியின் சகோதரர் வில்லியம் அவரது சட்டை காலரை பிடித்து இழுத்து கதவில் தள்ளினார் என்றும் அதனால் நான் கீழே விழுந்தும் என்றும் எனக்கு முதுகில் காயம் பட்டது என்றும் தெரிவித்துள்ளார்
 
என்னோடு நேருக்கு நேர் சண்டையிட்டார் என்றும் ஆனால் நான் சண்டைக்கு மறுத்து விட்டேன் என்றும் சிறிது நேரத்துக்கு பிறகு தனது செயலை நினைத்து வருந்திய வில்லியம் தன்னிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக என்னை பார்த்தார் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்
 
இதனை அடுத்து பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் அரண்மனைக்குள் ஹாரி மற்றும் வில்லியம்ஸ் ஆகிய இருவருக்கும் இடையே அடிதடி சண்டை நடந்து உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran