ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 19 ஜூலை 2021 (10:21 IST)

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

பிரிட்டனைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டும் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
பிரிட்டனைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித்.  இவர் கொரோனா வைரஸ் தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக்கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் எனக்கு கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 நோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மிக லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் பதிவு செய்துள்ளார் 
 
2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது