1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (20:09 IST)

பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள்: இனி பற்றாக்குறை இருக்காதா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருவதை அடுத்து உலக நாடுகள் இந்தியாவுக்கு கை கொடுத்து வருகின்றன. அமெரிக்கா ரஷ்யா ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அரபு நாடுகளும் சிங்கப்பூர் மலேசியா உள்பட பல நாடுகள் இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் மருந்து பொருட்களை அனுப்பி கொண்டு வருகின்றன 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரிட்டனில் இருந்து சென்னைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொண்ட விமானம் வந்தடைந்துள்ளது. இந்த விமானத்தில் 450 ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஏற்கனவே பிரிட்டனில் இருந்து மருந்துப் பொருட்களுடன் கூடிய விமானம் வந்துள்ள நிலையில் தற்போது ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்ட விமானம் வந்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் இந்த சிலிண்டர்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது