பேய் பயத்தால் வீட்டை காலி செய்த ஜனாதிபதி


Abimukatheesh| Last Updated: திங்கள், 13 மார்ச் 2017 (15:53 IST)
பிரேசில் நாட்டின் ஜனாதிபதி மிசெல் தெமர் வீட்டில் பேய் இருப்பதாக அஞ்சி தன் குடும்பத்தோடு வீட்டை காலி செய்துள்ளார்.

 

 
பிரேசில் ஜனாதிபதி மிசெல் தெமர்(76), அவரது மனைவி மர்சிலா(33) மற்றும் குழந்தை மகன்மிசெல் சின்கோ(7) ஆகியோருடன் ஆல்வோரட அரண்மனையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வீட்டில் சில அமானுஷ விஷயங்களை ஜனாதிபதியும், அவரது மனைவியும் உணர்ந்துள்ளனர்.
 
இதனால் இருவரும் இரவு தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும் வீட்டில் பேய் மற்றும் ஆவிகள் இருக்கிறதா என்பதை அறிய ஜனாதிபதி மனைவி பாதிரியார் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்து சோதனை செய்துள்ளார்.
 
இதையடுத்து ஜனாதிபதி தனது குடும்பத்துடன் வீட்டை காலி செய்துவிட்டு, துணை ஜனாதிபதிக்கான வீட்டில் குடிபெயர்ந்துள்ளார். ஜனாதிபதியின் இந்த செயல் பிரேசில் நாடு முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :