1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 ஏப்ரல் 2021 (12:17 IST)

அதிகரிக்கும் கொரோனா... ஊரடங்கை எதிர்க்கும் பிரேசில் அதிபர் !

பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ, கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 

 
உலகம் முழுவதும் 133,669,384 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,898,495 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 107,792,356 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 22,978,533 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.  
 
இந்நிலையில் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,197,031 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 341,097 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 11,664,158 என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, பிரேசிலில் வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 195 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்  என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த சூழ்நிலையிலும் இப்போதும் கூட அதிபர் ஜெயீர் போல்சனாரோ, கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஏனென்றல் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதாரத்தின் சேதம் வைரஸின் விளைவுகளை விட மோசமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.