வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2024 (16:03 IST)

பிரேசில் விமான விபத்து.. ஒரு சில நிமிடங்கள் தாமதித்ததால் உயிர் தப்பிய பயணி..!

பிரேசில் நாட்டு விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 61 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணி ஒருவர் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமானத்தை மிஸ் செய்ததாகவும் அதனால் அவர் உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

பிரேசில் நாட்டு விமானம் இன்று திடீரென நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 57 பயணிகள் மற்றும் நான்கு விமான நிலைய ஊழியர்கள் பலியாகினர் என்பதும் இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக ஆட்ரியானா என்ற பயணி விமான நிலையத்திற்கு தாமதமாக வந்ததாகவும் செக்-இன் மையத்தில் அவர் தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் இதனால் அந்த விமானத்தை அவர் மிஸ் செய்ததாகவும் தெரிகிறது.

ஆனால் சில நிமிடங்களில் அவர் பயணம் செய்திருக்க வேண்டிய விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உயிரிழந்த செய்தியை கேட்டதும் அவர் மகிழ்ச்சி அடைவதா? அல்லது அதிர்ச்சி அடைவதா என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

விமான நிலைய அதிகாரி தன்னுடைய தாமதத்தை கண்டு கொள்ளாமல் என்னை அனுமதித்தால் நானும் இறந்திருப்பேன் என்றும் என்னை அனுமதிக்காத அதிகாரியை நான் கட்டிப்பிடித்து அவருக்கு நன்றி கூறினேன் என்றும் அவர் கூறினார்.

Edited by Siva