1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (08:40 IST)

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி!

Boris
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரிட்டன் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது சொந்தக் கட்சியான பழமைவாத கட்சி போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுத்தது.
 
இதனை அடுத்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் போரில் ஜான்சனுக்கு ஆதரவாக 211 பேர்களூம்,  எதிராக 148 பேர்களும் வாக்களித்தனர். இதனை அடுத்து 59% போரிஸ் ஜான்சனுக்கு வாக்குகள் கிடைத்த நிலையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் .
 
இருப்பினும் அடுத்த தேர்தலில் அவர் பழமைவாதக் கட்சியின் சார்பில் போட்டியிடுவது சந்தேகம் என்று கூறப்பட்டு வருகிறது.