வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (16:49 IST)

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய குண்டு வெடிக்கும் அபாயம்: பீதியில் ஜெர்மனி

இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை செயலிழக்க செய்வதற்காக ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் நகரில் இருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.


 

 
1944ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் ஆக்ஸ்பர்க் நகரமே நிர்மூலமாகிப் போனது குறிப்பித்தக்கது. இந்நிலையில் அப்பகுதியில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த வெடிகுண்டை யாரும் இல்லாத இடத்தில் வைத்து பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைக்க நிபுணர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியையொட்டி சுமார் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரையும் தங்களது வீடுகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
இதனையடுத்து சுமார் 50 ஆயிரம் மக்கள்வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.