வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2022 (15:35 IST)

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 30 பேர் பரிதாப பலி!

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் சற்றுமுன் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பரிதாபமாக பலியானது வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு என்பது அவ்வப்போது நிகழும் சாதாரண நிகழ்வாகிவிட்ட நிலையில் சற்று முன்னர் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் திடீரென குண்டு வெடித்தது. 
 
பெஷாவர் மசூதியில் வெடித்த குண்டு சக்திவாய்ந்த குண்டு என்றும் இதில் முதற்கட்டமாக 30 பேர் பலியாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இந்த மசூதியில் தொழுகைகாக ஏராளமானோர் கூடியிருந்த நிலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இடிபாடுகளுக்கு இடையே இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன