நம்பர் 1 இடத்துக்காக நடுவரை தூக்கி வீசிய ஆணழகன் (வீடியோ)


Abimukatheesh| Last Updated: வியாழன், 1 டிசம்பர் 2016 (15:23 IST)
கிரேக்கம் ஏதென்ஸ் நகரில் நடைப்பெற்ற ஆணழகன் போட்டியில் கியான்னிஸ் மேகோஸ் என்பவர், தன்னை நடுவர் நம்பர் 1ஆக அறிவிக்காத காரணத்தினால் அவரை தூக்கி வீசினார்.

 

 
கிரேக்கம் ஏதென்ஸ் நகரில் இந்த ஆண்டிற்கான வைர கிண்ணம் ஆணழகன் போட்டி நடைப்பெற்றது. கிரேக்கத்தை சேர்ந்த பிரபல பாடிபில்டர்களில் ஒருவரான கியான்னிஸ் மேகோஸ் என்பவர் கலந்துக் கொண்டார். இவர் இந்த போட்டியில் 100 கிலோவுக்கான பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
 
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் இருந்துள்ளார். ஆனால் நடுவர்களின் கணிப்பு மேறுமாதிரி அமைந்தது. அவர்கள் வேறொரு நபரை சாம்பியனாக தேர்வு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கியான்னிஸ் நடுவர்களை தாக்கத் தொடங்கினார்.
 
அர்மாண்டோ மார்க்வெஸ் என்ற நடுவரை தூக்கி வீசிய சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தற்போது இந்த வீடியோ இளையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
நன்றி: Levrone2000

webdunia

இதில் மேலும் படிக்கவும் :