வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (09:36 IST)

நாளை நிகழும் வானியல் அதிசயம்! சூப்பர் ப்ளூ மூன்! – மிஸ் பண்ணிடாதீங்க!

Strwaberry Moon
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் ப்ளூ மூன் (நீல நிலவு) நாளை வானில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வானில் ஏராளமான கோள்கள், நட்சத்திரங்கள் உள்ள நிலையில் அடிக்கடி அதிசயமான வானியல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறாக பூமியை சுற்றி வரும் நிலவு சில சமயங்களில் சுற்றுவட்ட பாதையில் பூமிக்கு அருகே வருவதும் உண்டு. அந்த சமயங்களில் நிலவு நீல நிறத்தில் பெரிதாகவும், பிரகாசமாகவும் காட்சியளிக்கும். இதை ப்ளூ மூன் (Blue Moon) என அழைக்கிறார்கள்.

கடந்த 2021ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இந்த ப்ளூ மூன் தோன்றியது. அதற்கு பிறகு நாளை (ஆகஸ்ட் 30) இந்த ப்ளூ மூன் தோன்ற உள்ளது. பௌர்ணமி நாளான நாளை இந்த ப்ளூ மூன் பிரகாசமாக காட்சியளிக்கும். இதை வெறும் கண்களாலேயே கண்டு களிக்கலாம்.

Edit by Prasanth.K