1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (16:36 IST)

பிறந்தநாள் விழாவில் இனிப்பு சாப்பிட்ட 25 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தானில் சோகம்

பாகிஸ்தான் நாட்டின் உள்ள கரார் லால் இசான் பகுதியில் பிறந்தநாள் விழாவில் இனிப்பு சாப்பிட்ட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

 
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள கரார் லால் இசான் பகுதியைச் சேர்ந்தவர் உமர் ஹயாத். இவர் தனது பேரனின் பிறந்த நாள் விழாவை மிக விமரிசையாகக் கொண்டாடினார்.
 
இந்த பிறந்தநாள் விழாவிற்காக அங்குள்ள ஒரு கடையில் இனிப்புகளை வாங்கி வந்தார். அந்த இனிப்பை அந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கும், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் கொடுத்தார்.
 
அதை சாப்பிட்டதும் பலருக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, மயங்கிவிழுந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழந்தனர்.
 
இந்நிலையில், மேலும், 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
கடையில் இருந்து வாங்கி வரப்பட்ட இனிப்பு பண்டங்களில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.