வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (11:55 IST)

ஜோ பிடன் வந்த அமெரிக்கா காலி! – ட்ரம்ப்புக்கு சப்போர்ட்டாக பின்லேடனின் மருமகள்!

அமெரிக்காவில் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப்புக்கு ஆதரவாக ஒசாமா பின்லேடனனின் மருமகள் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் தேர்தல் பரப்புரைகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தில் வசித்து வரும் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின் லேடின் அதிபராக ட்ரம்ப் வந்தால் மட்டுமே தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க முடியும் என கூறியுள்ளார். ஜனநாயக கட்சி அதிபர் ஒபாமா ஆட்சியில் இருந்த காலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதிக்கம் அதிகரித்ததாக சுட்டி காட்டியுள்ள அவர், ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால் இரட்டை கோபுர தாக்குதல் போன்ற மற்றுமொரு தாக்குதலை அமெரிக்கா சந்திக்க வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ட்ரம்ப் ஆட்சியில் தீவிரவாத நடவடிக்கைகள் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், ட்ரம்ப்பை தொடர்ந்து ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.