ஆபிஸ் டைம் தவிர்த்த நேரங்களில் தொல்லை கூடாது! – பெல்ஜியம் அரசு அறிவிப்பு!
பெல்ஜியம் நாட்டில் அரசு பணியாளர்களை பணி நேரம் தவிர்த்து பிற நேரங்களில் அழைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் அரசாங்கங்கள் தங்கள் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர ஊழியர்களை பணியமர்த்துவது நடைமுறையாக உள்ளது. அரசு வேலை என்பது பல நாடுகளில் மக்களுக்கு விருப்பமான ஒன்றாகவும் உள்ளது. அரசு பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதும் ஒரு காரணம்.
இந்நிலையில் பெல்ஜியம் அரசு அதன் பணியாளர்களுக்காக புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. ரைட் டூ டிஸ்கனெக்ட் என்னும் திட்டத்தின்படி அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வேலை நேரம் தவிர்த்த பிற நேரங்களில் அழைத்து தொல்லை செய்யக்கூடாது என்று பெல்ஜியம் அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் இந்த திட்டத்தை ஊழியர்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.