இந்தியாவிற்கு என் மனதில் என்றும் நீங்காத தனிச்சிறப்பிடம் உண்டு: பான் கி மூன் உருக்கம்


Suresh| Last Updated: புதன், 2 மார்ச் 2016 (14:44 IST)
இந்தியருக்கு மகளை திருமணம் செய்துதந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலார் பான் கி மூன் இந்தியாவிற்கும் என் மனதில் என்றும் நீங்காத தனிச்சிறப்பிடம் உண்டு என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.


 

 
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக பதவி வகிப்பவர் பான் கி மூன்.
 
பிரபல வலைத்தளமான "லிங்க்ட்இன்" (LinkedIn) பக்கத்தில் தனது பணிசார்ந்த அனுபவங்களை பான் கி மூன் பதிவு செய்துள்ளார். அதில் தனது, இளமைக்கால நினைவுகளை குறிப்பிட்டுள்ளார். 
 
அதில், பான் கி மூன், "டெல்லியில் கிடைத்த அந்த பணிவாய்ப்பை மிகவும் சுவாரஸ்யமானதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் நான் கருதினேன்.
 
சிறிய அளவு கொண்ட அந்த அலுவலகத்தில் நான் பணியாற்றிய அந்தக் காலக்கட்டம் அளித்த அனுபவத்தால் வசதியான சூழலில் வேலை செய்தவர்களுக்கு கிடைத்ததைவிட அதிகமான படிப்பினைகளும், சவால்களை எதிர்கொண்டு புதிய திசைகளையும் நோக்கி என்னை விரிவாக்கிக் கொள்ளும் ஆற்றல் உருவானது.
 
டெல்லியில் இருந்தபோது நிறைய விஷயங்களை எழுதவும், ஆய்வறிக்கைகளை உருவாக்கவும், கிடைத்த அனுபவங்களை பின்னர் எனது வாழ்க்கையில் நினைத்துப் பார்க்கவும் முடிந்தது. 
 
நான் பார்த்த தொழிலுக்கு அப்பாற்பட்டு,, தனிப்பட்ட முறையிலும் இந்தியாவின்மீது மிகுந்த நாட்டம் எனக்குள் ஏற்பட்டது.
 
தெற்காசியாவிற்கும் குறிப்பாக இந்தியாவிற்கும் என் மனதில் என்றும் நீங்காத தனிச்சிறப்பிடம் உண்டு. எனது இரண்டாவது குழந்தை இந்தியாவில்தான் பிறந்தது.
 
எனது மகள் ஒரு இந்திய வாலிபரை திருமணம் செய்து கொண்டார். எனது மகளுக்கு பிறந்த பேரக் குழந்தையை எனது பிரியத்திற்கு உகுரிய கொரியா-இந்தியா கூட்டுத்தயாரிப்பாக பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். என்று அந்த பதிவில் பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னதாக, பான் கி மூன் டெல்லியில் உள்ள தென் கொரியா நாட்டின் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :