வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 ஜனவரி 2021 (08:33 IST)

காதலில் விழுந்தேன்; கால் தடுக்கி விழுந்த காதலி! – ஆஸ்திரியாவில் ஆச்சர்ய சம்பவம்!

ஆஸ்திரியா நாட்டில் காதலன் ஒருவர் தனது காதலிக்கு மலை உச்சியில் வைத்து காதலை தெரிவித்து சில நிமிடங்களில் காதலி தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.

உலகம் முழுவதும் காதலர்கள் தங்கள் காதலியிடம் தனது காதலை தெரிவிக்க பல்வேறு நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரியாவில் காதலன் ஒருவர் செய்த செயலால் நேர்ந்த விபரீதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரியாவின் கரீந்தியா பகுதியில் உள்ள 27 வயது இளைஞர் தனது 32 வயது காதலியிடம் காதலை தெரிவிக்க எண்ணியுள்ளார். அதை நூதனமாக செய்ய நினைத்த அவர் தனது காதலியை அங்குள்ள பால்கெர்ட் என்ற மலை உச்சிக்கு அழைத்து சென்று தனது காதலை தெரிவித்துள்ளார். அவரது காதலை அந்த பெண்ணும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அந்த சமயம் எதிர்பாராத விதமாக காதலி தவறிவிழ அவரை காப்பாற்ற முயற்சித்த காதலனும் தவறி விழுந்துள்ளார். 50 அடி தாண்டிய போது காதலன் அங்கிருந்த மலை முகட்டை இறுக பிடித்துள்ளார். அதேசமயம் தவறி விழுந்த காதலி பாறைகளில் மோதாமல் கீழே பனியில் விழுந்து மயக்கமடைந்துள்ளார். இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலை உச்சியிலிருந்து விழுந்தும் காதலர்கள் உயிர்பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.