வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (23:09 IST)

ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அம்பானீஸ் இன்று இந்தியா வருகை

australaina pm
ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அம்பானீஸ் இன்று  இந்தியாவுக்கு வந்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஷ் 5 நாள் பயணமாக இன்று வந்துள்ளார். இந்தப் பயணத்திற்கு முன் அவர் ஆஸ்திரேலியாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்காவுடன் அடுத்து நடக்கவுள்ள நிகழ்ச்சிகள் பற்றி அறிவிக்கப்படும் . என்று கூறினார்.

இந்தியா பயணத்தின் இரு நாடுகள் உறவு பற்றி பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை செய்வார் என தெரிகிறது. தற்போதும் நடைபெற்று வரும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நாளை குஜராத்தில் நடக்கவுள்ள 4 வது டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் அவரரும், நேரில் பார்க்கவுள்ளதாகவும், இதற்கு  முன் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி டாஸ் போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அமெரிக்க பயணத்தின் போது, அந்தோனி, அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்குவதற்காக முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.