வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 22 செப்டம்பர் 2014 (18:20 IST)

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர செல்பவர்களைத் தடுக்க ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் போராட்டங்களில் கலந்துகொள்ளச் செல்லும் குடிமக்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் ஈராக்கில் 15 நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிரியாவின் ஒரு பகுதியையும் கைப்பற்றி இரண்டையும் இணைத்து இஸ்லாமிய அரசாக அறிவித்துள்ளனர். இதனால் அண்டை நாடுகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து போர் புரிவதற்குப் பல்வேறு நாட்டை சேர்ந்த ஜிகாதிகள் ஈராக் சிரியாவிற்குச் செல்கின்றனர்.
 
குறிப்பாக, ஆஸ்திரேலியாவிலிருந்து அதிகமான ஜிகாதிகள் செல்கின்றனர். இதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாதத் தடுப்புச சட்டம் ஒன்றைக கொண்டு வந்துள்ளது. இஸ்லாமிய போராளிகள் எழுப்பிவரும் உள்நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் போராட்டங்களில் கலந்து கொள்ளச செல்லும் குடிமக்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாதத் தடுப்புச சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
 
செய்தி ஊடகங்களின் தகவல் படி இந்த புதிய சட்டம் புதன்கிழமை செனட் சபையில் அறிமுகபடுத்தப்பட்டது. இந்தச சட்டப்படி ஆஸ்திரேலிய குடிமகன் செய்யும் போது அந்த அரசாங்கத்தால் போகக் கூடாத பகுதிக்கு செல்வது சட்டபடிக் குற்றமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.