வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 23 ஜனவரி 2019 (20:54 IST)

அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வாழும் ஒரு சிறிய இஸ்லாமிய சமூகத்தை தாக்குவதற்காக திட்டம் போட்டிருந்ததாக குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பருவ வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சந்தேக நபர்கள், வீட்டிலே தயாரிக்கும் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். 1980 களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மதகுரு ஒருவரால் உருவாக்கப்பட்ட இஸ்லாம்பெர்கை இவர்கள் தாக்குவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இஸ்லாமிய சமூகமொன்றை தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டும் சதித்திட்டம் ஒரு பள்ளி சிறுவன் கொடுத்த துப்பு மூலமே தெரியவந்திருக்கிறது. இஸ்லாம்பெர்க் சமூகம், பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்கும் முகமாக இருக்கிறது என சிலர் இதனை ஒரு சதி நடவடிக்கையாக குற்றம்சாட்டிவந்தனர்.
 
கைது செய்யப்பட்ட மூன்று ஆண்களும் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர். ஆண்ட்ரூ கிரைஸல் (18), வின்சென்ட் வெட்ரோமில் (19), ப்ரியன் கொலோனேரி என்ற மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதங்களை வைத்திருந்தது மற்றும் சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள 16 வயது சிறுவனும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.