Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிரியாவில் கார் வெடிகுண்டு: 68 குழந்தைகள் உள்பட 126 பேர் பரிதாப பலி

திங்கள், 17 ஏப்ரல் 2017 (04:29 IST)

Widgets Magazine

சிரியாவில் தீவிரவாதிகளின் கைவரிசையால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது வெடிகுண்டுகள் வெடித்து அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில் நேற்று நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் 68 குழந்தைகள் உட்பட 126 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சிரியாவின் வடக்கு பகுதிகளான ஃபுவா மற்றும் கஃப்ராயா நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்கள் பேருந்துகளின் மூலம் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு மேற்கு அலெப்போ நகரின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்தனர். மாற்று இடம் கிடைக்கும் வரை அவர்கள் அந்த பேருந்துகளிலேயே தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், வேகமாக வந்த கார் ஒன்று இந்த பேருந்துகளின் மீது மோதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் தங்கியிருந்த பேருந்துகள் வெடித்துச் சிதறின. பேருந்துகள் இருந்தவர்கள் மற்றும் அருகில் பாதுகாப்புக்கு இருந்தவர்கள் என மொத்தம் 126 பேர் இந்தத் தாக்குதலில் பலியானார்கள். இவர்களில் 68 பேர் பிஞ்சுக்குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் ஒரு கோழைத்தனமானது என்று உலக நாடுகள் கண்டித்து வருகின்றன.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

செக்ஸ் பொம்மையில் நிஜ பெண்களின் சருமம்: இப்படி கூட நடக்குமா?

உலகம் முழுவதும் செக்ஸ் பொம்மைகளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ...

news

தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்ட எம்.எல்.ஏ! பெரும் பரபரப்பு

ஆந்திர மாநிலத்தில் நகராட்சி சேர்மன் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் தன்னைத்தானே செருப்பால் ...

news

மகளிர் விடுதியில் நள்ளிரவில் 3 மாணவிகளிடம் வாலிபர் செய்த சேட்டை என்ன தெரியுமா?

நாகர்கோவில் கல்லூரி ஒன்றின் மகளிர் விடுதியில் நள்ளிரவில் நுழைந்த வாலிபர் ஒருவர் 3 ...

news

ஜெயலலிதா உயிரை குடித்த பழச்சாறு! திட்டமிட்டு கொடுக்கப்பட்டதா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ள நிலையில் இந்த மர்மம் கொஞ்சம் ...

Widgets Magazine Widgets Magazine