வேலையை மாற்றிக் கொள்வோமா? ட்ரம்புக்கு அர்னால்ட் சவால்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (19:53 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், கலிஃபோர்னியாவின் முன்னாள் ஆளூநர் அர்னால்ட ஆகியோர் இடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியால் ஏற்பட்ட மோதல் கடுமையான தீவிரமடைந்து வருகிறது.

 


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அதிரடியான உத்தரவுகளை அர்னால்ட் கடுமையாக விமர்சித்தார். அதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே சொற்போர் தொடங்கியது. ட்ரம்ப் முன்பு நடத்தி வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தற்போது அர்னால்ட் நடத்தி வருகிறார்.

அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப் அந்த நிகழ்ச்சியை தன்னை போல் யாராலும் வெற்றி பெற வைக்க முடியாது என்று கூறினார். இதற்கு அர்னால்ட், தேவைப்பட்டால் வேலையை மாற்றிக் கொள்ளத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ட்ரம்ப் பற்றி கூறி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் அர்னால்ட் தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :