விசா பெற ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கு அவசியம்; ட்ரம்ப் உத்தரவு
அமெரிக்கா விசா பெற ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கு விவரங்களை குறிப்பிட வேண்டும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாவில் புதிய கட்டுபாடுகளை கொண்டு வர உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹெச்-1பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்கா விசா பெறும் விண்ணப்பத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர், இ-மெயில் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் விசா விண்ணப்பதாரர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனரா என அறிய முடியும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஒருவகையான கண்கானிப்பு முறை. இது பிறரின் உரிமை மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும்.