மன அழுத்தத்தைக் கண்டறியும் ஆப்பிள் போன்!
ஆப்பிள் போனில் மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் கண்டறியலாம் என்ற தகவல் வெளியாகிறது.
Apple event -ல் I phone 13 மற்றும் iphone 13 மினி போன்களை சமீபத்தில் இந்நிறுவனத்தின் சி இ ஒ டிம் கும் அறிமுகம் செய்தார்.
தற்போதுள்ள தொழில்நுட்பத்தைக் காட்டிலும் இந்த வகை சீரிஸில் கேமராவில் புதிய சிறப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சினிமாட்டில் மோட்-ஐ அறிமுகம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தஆப்பிள் 13 சீரிஸ் விற்பனையில் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பிரபல மருந்து நிறுவனமான biogen ஆகியவை இணைந்து முகத்தை மட்டும் ஸ்கேன் செய்தால் பயனர்களின் மன அழுத்தத்தைக் கண்டறியும் புதிய நவீன தொழில்நுட்பத்தை தயாரித்து வருகிறது. இது மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.