சிரியாவில் மீண்டும் விஷக் குண்டு தாக்குதல்

Suresh| Last Modified வெள்ளி, 2 மே 2014 (16:45 IST)
சிரியாவில் நடந்த விஷக் குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சி படை சில நகரங்களைக் கைப்பற்றியுள்ளன. அவற்றை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுவருகிறது. அந்த நகரங்களின் மீது விஷக் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னர் இட்லிப், ஹமா மாகாணங்களில் இது போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பலர் பலியாயினர். இதற்கு ஐ நா சபை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அதை சிரியா மறுத்தது. இந்நிலையில் மீண்டும் விஷக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அல் தமனாக் நகரின் மீது பறந்த ஹெலிகாப்டர் 2 விஷக் குண்டுகளை வீசியதாக தெரியவந்துள்ளது. அவை குளோரின் வாயுவை வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்ததாகுதலை சிரியா நடத்தவில்லை என்று அறிவித்துள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :