செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (16:34 IST)

மில்க்‌ஷேக் கேட்டவருக்கு சிறுநீர்.. ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி..!

ஆன்லைனில் மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு சிறுநீர் டெலிவரி செய்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆன்லைனில் ஒரு நபர் மில்க் ஷேக் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு  ஊழியர் டெலிவரி செய்தார். மில்க் ஷேக் என நினைத்து அதை அவர் குடிக்க முயன்ற போது அதில் சிறுநீர் வாசனை வந்ததை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார்
 
உடனடியாக அவர் டெலிவரி ஊழியரை தொடர்பு கொண்ட போது  தனக்கு சிறுநீர் கழிக்க கூட நேரமில்லை என்றும் அதனால் காலிக்கோப்பை ஒன்றில் சிறுநீர் கழித்ததாகவும் அந்த சிறுநீர் கோப்பையை தவறுதலாக மில்க் ஷேக் என மாற்றி கொடுத்து விடவும் கூறியுள்ளார்

இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில் ஆன்லைன் டெலிவரி ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த புகார் மீது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

Edited by Mahendran