1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 20 ஜூலை 2022 (09:51 IST)

டாலர் நோட்டை தொட்டதும் உடல் மரத்துப் போன பெண்… அப்படி என்ன இருந்தது?

அமெரிக்காவில் பெண் ஒருவர் கீழே கிடந்த பணம் ஒன்றை எடுத்த போது அவர் உடல் மரத்துப் போய் மயங்கியுள்ளார்.

அமெரிக்காவின் டென்னசி என்ற பகுதியுக் பெல்லூவில் உள்ள நெடுஞ்சாலை 70 இல் உள்ள மெக்டொனால்டுக்கு வெளியே தரையில் ஒரு டாலர் நோட்டை கூறிய ரெனி பார்சன்ஸ் என்ற பெண் எடுத்துள்ளார். அதைத் தொட்டதுமெ அவர் உடல் உறுப்புகளில் மாற்றம் ஏற்பட்டு மயங்கியுள்ளார். இதையடுத்து அவர் கணவரால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மருத்துவர்கள் சிகிச்சையில் அவர் உடல்நிலை சீராகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள் அந்த டாலர் நோட்டில் அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் மயக்க மருந்து தடவப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.