வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 30 செப்டம்பர் 2014 (09:56 IST)

நரேந்திர மோடியை 'கெம் சோ' என்று நலம் விசாரித்தார் ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா, நரேந்திர மோடியை 'கெம் சோ' எப்படி இருக்கிறீர்கள் என குஜராத் மொழியில் நலம் விசாரித்தார்.
 
பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் நரேந்திர மோடி, முதல் முறையாக கடந்த 25 ஆம் தேதி அமெரிக்கா சென்றார்.
 
நியூயார்க்கில் ஐ.நா. பொதுசபை கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வந்தார்.
 
அவரை வரவேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா 'கெம் சோ' எப்படி இருக்கிறீர்கள் என குஜராத் மொழியில் நலம் விசாரித்தார். தொடர்ந்து இருவரும் சாதாரண முறையில் சந்தித்துப் பேசினார்கள்.
 
பின்னர் ஒபாமா, மோடிக்கு விருந்து அளித்தார். இதையடுத்து இரு தலைவர்களுக்கும் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ சந்திப்பு இன்று ஓவல் அலுவலகத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.