திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (11:36 IST)

பெற்றோரின் போதைப் பழக்கத்தால் பலியான கைக்குழந்தை – அமெரிக்காவில் நடந்த கொடூர சம்பவம் !

அமெரிக்காவில் போதையில் இருந்த தம்பதிகள் தங்கள் குழந்தையைக் கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெண்டா மற்றும் ஜேம்ஸ் எனும் தம்பதியிகள் அமெரிக்காவில் வசித்து வரும் தம்பதிகள். இவர்களுக்கு ஓக்கிஸ் என்ற கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் போதைப் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஹோட்டல் ஒன்றில் குழந்தையோடு அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது இருவரும் போதைப் பொருட்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் போதை தலைக்கேறி புத்திமாறிய அவர்கள் தங்கள் குழந்தை ஓத்தீஸுக்கும் போதைப் பொருளைக் கொடுத்துள்ளனர். இதனால் குழந்தை அந்த இடத்திலேயே இறந்துள்ளது. குழந்தை இறந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் குழந்தையை அங்குள்ள பிரிட்ஜ் பிரீஸரில் வைத்துவிட்டு தப்பிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகமடைந்த போலீஸார் அவர்களிடம் துப்பாக்கி முனையில் நடத்திய விசாரணையில் குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கில் தாய் அமெண்டாவுக்கு 99 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.