1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 நவம்பர் 2021 (07:51 IST)

ஜோ பைடன் - ஜின்பிங் காணொளி வாயிலாக முக்கிய ஆலோசனை!

ஜோ பைடன் - ஜின்பிங் காணொளி வாயிலாக முக்கிய ஆலோசனை!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஆகிய இருவரும் காணொளி வயலாக முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
உலக அளவில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் வல்லரசாக இருந்து வரும் நிலையில் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போட்டி உள்ளிட்ட பல கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது
 
இந்த நிலையில் இரு நாட்டு அதிபர்களும்  சந்தித்து தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் காணொளி வாயிலாக சந்தித்து பேசினர்
 
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்ததாக இரு நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்