1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (08:53 IST)

கொரோனா எப்படி வந்தது? ஜோ பைடன் அதிரடியால் சிக்கலில் சீனா?

கொரோனா வைரஸை சீனா தான் உருவாக்கியது என கூறும் ரகசிய ஆவணங்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளதாக தகவல். 

 
முன்னதாக இந்த கொரோனா வைரஸ் சீனா தான் உருவாக்கியது என கூறப்பட்டு இதன் மீதான விவாதங்கள் நடைப்பெற்று வந்தது. இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இது சீனாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. 
 
இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவியது குறித்து உலக சுகாதார நிறுவனம் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க உள்ள நிலையில், கொரோனா சீனாவில் இருந்து பரவியது குறித்த விசாரணையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தீவிரப்படுத்தும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.