1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 26 மார்ச் 2016 (15:17 IST)

வட கொரியாவில் உளவு பார்த்தது உண்மைதான்: அமெரிக்க உளவாளி ஒப்புதல்

வடகொரியாவின் ராணுவ ரகசியங்களை திருட முயன்றதாகவும், உளவு பார்த்ததாகவும் கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.


 

 
தங்கள் நாட்டை உளவு பார்க்கும் அமெரிக்காவில் ஏவலர்களை வடகொரியா அடிக்கடி கைது செய்து வருகிறது.
 
தங்கள் நாட்டு ராணுவ ரகரியங்களை உளவு பார்த்தாக அமைரிக்க இளைஞர் ஒருவரை ஆதாரங்களுடன் வட கொரியா சமீபத்தில் கைது செய்தது.
 
குற்றச்சாட்டுகள் நிறுபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.
 
இதைபோல , மற்றொரு இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக வடகொரியா மீது மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்தது.
 
இந்நிலையில், அந்த இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தென்கொரியாவுடன் இணைந்து வடகொரியாவின் ராணுவம் மற்றும் அரசின் ரகசியங்களை திருடியதாக அவர் கூறினார்.


 

 
மேலும், இதற்காக தனக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
 
வடகொரியாவின் பொதுவுடைமை அரசை கவிழ்ப்பதற்காகவே இந்த சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் கூறி, தனது செயலுக்காக அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
அமெரிக்காவின் சார்பில் உளவு பார்த்த இவர், தனது குற்றத்தை கண்ணீருடன் ஒப்புக்கொள்ளும் புகைப்படங்களை வடகொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
இதன் மூலம் அமைரிக்கா தொடர்ந்து வடகொரியாவின் ரகசியங்களை திருடவும், உளவு பார்த்தும் வருகின்றத என்பது வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது என்து குறிப்பிடத்தக்கது.