Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விரட்டும் அமெரிக்கா; வரவேற்கும் ஜப்பான், சீனா


Abimukatheesh| Last Updated: வியாழன், 9 மார்ச் 2017 (18:20 IST)
அமெரிக்காவோடு பொருளாதாரத்தில் போட்டி போடும் ஜப்பான மற்றும் சீனா நாடுகள் வெளிநாடுகளில் இருக்கும் திறமையானவர்களை ஈர்க்க ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது.


 

 
உலக நாடுகளில் பொருளாதாரத்தில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா நாடு வெளிநாட்டினர் குடியேறுவதற்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து உள்ளது. இதனால் அதிக அளவில் அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் கனவு பாதித்துள்ளது. மற்ற நாடுகளை விட இந்திய நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
 
இதனால் இந்தியா மற்றும் வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள், வர்த்தக தலைவர்கள் என அனைவருமே தாயகத்திற்குத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
வெளிநாடுகளில் இருக்கும் திறமையானவர்களை ஜப்பான் நாட்டிற்கு ஈர்க்க, ஒரே வருடத்தில் குடி உரிமை வழங்க திட்டமிட்டுள்ளது. சீன அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவின் இன்னோவேஷன் திறமையை மேம்படுத்த, சீனா இந்தியர்களை அதிகளவில் பணியில் அமர்த்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
 
இதனால் இனி இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு சீனா, ஜப்பான என செல்வார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :