திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஜூலை 2018 (15:56 IST)

இந்திய எல்லையில் சீனா? பின்வாங்கிய அமெரிக்கா?

இந்தியா - சீனா எல்லையில் இருக்கும் டோக்லாம் பகுதியில் சீனா அத்துமீறியுள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டது என்பதை தற்போது அமெரிக்க அரசு மருத்து பின்வாங்கியுள்ளது. 
 
டோக்லாம் பகுதி பூடான் நாடடுக்கு சொந்தமானது. இந்த இடத்தை சீனா ஆக்கிரமித்து சாலை அமைத்து வருகிறது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தை ஒட்டி இந்த சாலையை அமைக்க சீனா முயற்சித்து வருகிறது. 
 
இதனால் பிரச்சனை ஏற்பட்ட போது இருநாடுகளும் தங்களது ராணுவத்தை டோக்லாம் பகுதியில் வித்தது. இதன் பின்னர் 73 நாட்கல் கழித்து எல்லையில் குவிகப்பட்ட ராணுவம் பின்வாங்கப்பட்டது. 
 
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறைக்கான முதன்மை செயல் அதிகாரி, எப்படி தெற்கு சீன கடல் பகுதியை சீனா ஆக்ரமித்துள்ளதோ அதேபோல் தற்போது இமயமலை பகுதியையும் ஆக்ரமித்து வருகிறது என தெரிவித்ததாக செய்தி வெளியானது. 
 
ஆனால், இந்த செய்தியை அமெரிக்க அரசு மறுத்துள்ளது. அவ்வாறு ஒரு தகவலை யாரும் கூறவில்லை என குறிப்பிட்டுள்ளது. இந்தியா தனது வட எல்லைகளை முழு ஆற்றலுடன் பாதுகாப்பதாகவும், இது இந்தியா - சீனா இடையேயான பிரச்சனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.