உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நிற்போம்! – அமேசான் செயல் அதிகாரி அறிவிப்பு!
உக்ரைனில் ரஷ்யா போர் தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நிற்போம் என அமேசான் நிறுவன செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் கார்கிவ் உள்ளிட்ட பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. அதேசமயம் உக்ரைனுக்கு நிதியுதவி, ஆயுத உதவிகளையும் பல நாடுகள் வழங்கியுள்ளன.
இந்நிலையில் இந்த போரில் உக்ரைன் மக்கள் பக்கம் நிற்பதாக அமேசான் நிறுவன சிஇஓ ஆண்டி ஜெஸ்சி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது. உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கிறது, தொடர்ந்து உதவி செய்யும்” என தெரிவித்துள்ளார்.