ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (22:24 IST)

பெண்ணின் திருமணத்தில் அற்புத நிகழ்வு

பெண்ணின் திருமணத்தில் அற்புத நிகழ்வு

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஜெனி ஸ்டீபன்(33) என்ற பெண் துவக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.


 


இவருக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் நடந்தது. இதற்கிடையே, 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் தந்தை கொடூரமாக கொல்லப்பட்டார். இதை அடுத்து, ஸ்டீபனின் உடல் உறுப்புக்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்திருந்தனர். அவரது இதயம் நியூ ஜெர்சியைச் சேர்ந்த தாமஸ் என்பவருக்கு பொருத்தப்பட்டது. மாற்று அறுவை சிகிச்சை மூலம் தந்தையின் இதயத்தைப் பெற்று உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் 72 வயதுடைய தாமசை தனது திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார் ஜெனி. அந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்ற தாமஸ், ஜெனியின் திருமணத்திற்கு சென்றார்.

இருவரும் சந்தித்தபோது ஒருவரையொருவர் கட்டித்தழுவி ஆனந்தமடைந்தனர். தாமஸ், ஜெனியின் கையை தனது இதயத்தில் வைத்து, அவளுக்கு முத்தம் கொடுத்தார். பிறகு அவளை மணமகன் பால் மானிர் கையில் ஒப்படைத்து திருமணத்தை நடத்தி வைத்தார். தந்தையின் இதயம் தன்னை வாழ்த்தியதால் மகிழ்ச்சியடைந்த ஜெனி, தாமஸின் கையை பிடித்து நன்றி தெரிவித்தார்.