வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:10 IST)

அல்ஜீரியாவில் பயங்கர காட்டுத்தீ; 26 பேர் உடல் கருகி பலியான சோகம்!

Algeria
அல்ஜீரியா நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பல குடியிருப்புகள் எரிந்து நாசமானதுடன் பல மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அல்ஜீரியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் காட்டுத்தீ பல்வேறு மோசமான விளைவுகளையும், உயிர்பலியையும் ஏற்படுத்துகிறது. தற்போது கடந்த சில நாட்களாக அல்ஜீரியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

அல்ஜீரியாவின் வட பகுதியை சேர்ந்த 8 மாகாணங்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளன. இதில் துனிசியா மாகாண எல்லை நகரமான எல் டார்ப் காட்டுத்தீயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நகரை சேர்ந்த 24 பேர் தீயில் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளனர். செட்டிப் நகரிலும் தாய், மகள் தீயில் கருகி பலியாகியுள்ளனர்.

இதுவரை காட்டுத்தீயால் 37 பேர் பலியாகியுள்ளனர். காட்டுத்தீயில் பலியானோர் குடும்பங்களுக்கு அந்நாட்டு அதிபர் அப்தெல் மஜித் இரங்கல் தெரிவித்துள்ளார். காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு படைகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் 90 பேர் பலியானது குறிப்பிடத்தகக்து.