அல்ஜீரியாவில் ராணுவ விமான விபத்து: 100-க்கும் மேல் உயிரிழப்பு!

Last Modified புதன், 11 ஏப்ரல் 2018 (16:13 IST)
அல்ஜீரியாவில் ராணுவ விமான விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் 200 ராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர். 
 
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரிய தலைநகர் அல்ஜீரிஸ் அடுத்து உள்ள பவ்பரிக் விமான நிலையத்திலிருந்து 200 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது. 
 
இந்த விமானம் வடக்கு பகுதியில் உள்ள பெசார் என்ற நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
 
ரஷ்ய தயாரிப்பு விமானமான இதில் ராணுவ வீரர்களை தவிர பயணிகளும் பயணித்தாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
 
விபத்துக்காக காரணம் இன்னும் தெரியவில்லை, சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :