இங்கிலாந்தில் ஸ்ருதிஹாசனின் காதலரை சந்தித்தாரா கமல்ஹாசன்?


Murugan| Last Modified வெள்ளி, 3 மார்ச் 2017 (12:51 IST)
சமீபத்தில் இங்கிலாந்து சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன், அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனின் ஆண் நண்பரை சந்தித்தார் என கூறப்படுகிறது.

 

 
சமீப காலமாகவே ஸ்ருதி, மைக்கேல் கார்சல் என்பவருடன்  காதல் வசப்பட்டுள்ளார் எனவும், அவர்கள இருவரும் ஒன்றாக சுற்றித் திரியும் புகைப்படங்களும் இணையதளங்களில் உலா வருகிறது. மைக்கேல் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ஆவார். மேலும், லண்டன் டீப் டைவிங் மென் என்ற நாடக குழுவில் நடிகராக இருக்கிறார். 
 
இசைக்குழு ஒன்றில் பங்கேற்பதற்காக ஸ்ருதி ஒருமுறை லண்டன் சென்ற போது, அவரின் சந்திப்பு கிடைத்தது எனவும், அவரை சந்திக்க ஸ்ருதி அடிக்கடி  இங்கிலாந்து செல்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் மைக்கேல் என் நண்பர் மட்டுமே. எங்களுக்குள் காதல் ஒன்றும் கிடையாது என ஸ்ருதி மறுத்துள்ளார்.


 

 
இந்நிலையில், இங்கிலாந்து-இந்தியா கலாச்சார விழாவிற்கு சமீபத்தில் லண்டன் சென்ற கமல்ஹாசன், மைக்கேல் மற்றும் சிலருடன் எடுத்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. எனவே, ஸ்ருதியின் காதலரை கமல்ஹாசன் சந்தித்தார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :