திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஜனவரி 2024 (13:27 IST)

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை: மத்திய அரசு தகவல்..!

Flight
மாஸ்கோ நோக்கி சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்துக்கு உள்ளானதாகவும் அது இந்தியாவைச் சேர்ந்த பயணிகள் விமானம் என்றும் கூறப்பட்டது. ஆனால் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் இல்லை, அந்த விமானம் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என்று  மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
 
ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், அது ஒரு இந்திய பயணிகள் விமானம் என்றும் கூறப்பட்டது.  ஆனால் தற்போது விபத்துக்குள்ளான விமானம் மொராக்கோ நாட்டைச் சேர்ந்தது என்று தெரியவந்தது.
 
மொராக்கோ நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், அந்த விமானம் மொராக்கோவில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தைச் சேர்ந்தது என்று தெரிவித்துள்ளது. அந்த விமானம் 14 பயணிகளையும், இரண்டு பணியாளர்களையும் ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. விமானத்தில் இருந்தவர்கள் குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை என்றும் மொராக்கோ நாடு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva