திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (10:41 IST)

இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல்! விடுவிக்கப்படுவாரா ஆங் சாங் சூகி?

aang sang su ki
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் தேர்தலுக்கு முன் ஆங் சாங் சூகி விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மியான்மரில் மக்களாட்சி நடந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் ராணுவம் – மக்கள் மோதிக் கொண்டதில் ஏராளமான பலி ஏற்பட்டது.

இந்நிலையில் மியான்மரின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் 7012 கைதிகளை விடுவிக்க உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ராணுவ தலைவர் மின் ஆங் “75வது சுதந்திர தினத்தையொட்டி 7012 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். கடுமையான குற்றங்களில் ஈடுபடாதவர்களின் தண்டனை காலம் குறைக்கப்படும். இந்த ஆண்டு இறுதியில் நாட்டில் தேர்தல் நடைபெறும். அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சாங் சூகி இந்த விடுதலையாகும் கைதிகளின் பட்டியலில் உள்ளாரா என்பது தெரியவில்லை. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் விடுவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Edit By Prasanth.K