துருக்கியை அடுத்து நியூசிலாந்து நாட்டில் நிலநடுக்கம்..! பீதியில் நடுங்கும் மக்கள்
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 40,000 பேர் உயிரிழந்ததாகவும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டம் ஆகி உள்ளதாகவும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் துருக்கியை அடுத்து தற்போது நியூசிலாந்து நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டு மக்கள் அச்சத்துடன் கட்டிடங்களிலிருந்து வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நியூசிலாந்து நாட்டில் உள்ள வெலிங்டன் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவில் 6.1 என பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. நியூசிலாந்து நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சேதம் மதிப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
Edited by Mahendran