மூளை இல்லாமல் பிறந்த சிறுவன்: கடைசியில் நேர்ந்த அதிசயம்!!
இங்கிலாந்தில் சிறுவன் ஒருவன் மூளை இல்லாமல் வாழ்ந்து வருவது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக யாராவது எதாவது தப்பு செய்துவிட்டால், உனக்கு அறிவில்லையா, மூளையில்லையா? என்று கேட்போம். ஆனால் இங்கிலாந்தில் 6 வயது சிறுவனனுக்கு நிஜமாகவே மூளை இல்லை.
இங்கிலாந்தை சேர்ந்த ஷெல்லி என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கர்ப்பமாக இருந்தபோது, மருத்துவமனைக்கு செக்கப்பிற்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு மூளை இல்லை என்றும், கருவை களைத்துவிடுங்கள் எனவும் அறிவுரை கூறினர். ஆனால் அவர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதற்கிடையே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பார்வை இல்லாமலும், வாய்பேசமுடியாமலும் இருந்த சிறுவன், மருத்துவர்களின் தீவிர முயற்சியால் தற்பொழுது பார்க்கும் திறன் வந்துள்ளது.
இதற்கு முன்னர் மூளை இல்லாமல் பிறந்த குழந்தைகள், 3 ஆண்டுகளில் இறந்துவிட்ட நிலையில், இச்சிறுவன் 6 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறான்.