கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிய சிறுவனை மீட்ட தீயணைப்புத் துறை வீரர்
சீனாவில் இரு கட்டிட சுவர்களின் இடையே சிக்கிக்கொண்ட ஒரு சிறுவனை, நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஜியாங்கி மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், தன் வீட்டிற்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது இரண்டு கட்டிடங்களுக்கு இடையே சென்ற சிறுவன் அதிலிருந்து வெளிவர முடியாமல் மாட்டிக்கொண்டான். அவனது அலறல் சப்தம் கேட்டு மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்தை நோக்கி விரைந்து வந்தனர். அங்கு தன் இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டிக்கொண்டு சென்ற தீயணைப்பு வீரர் சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
இதனையடுத்து அங்கு கூடி இருந்த மக்கள் தீயணைப்புத் துறையினரின் துரிதமான செயலை பாராட்டினர்.