1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 12 ஜனவரி 2019 (19:16 IST)

உல்லாசமா இருக்கலாம் வா: பிரபல நடிகையிடம் அத்துமீறிய இயக்குனர்

பிரபல நடிகையிடம் இயக்குனர் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகள் பலர் தற்பொழுது திரைத்துறையில் தாங்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர். இதில் பலரது முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் பிடித்தா பாக் என்ற நடிகை தான் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். பிரபல இயக்குனரின் உதவியாளர் ஒருவர் எனக்கு போன் செய்து நான் புதிதாக படம் இயக்கவுள்ளேன், அதில் நீங்கள் கதாநாயகியாக நடிக்கிறீர்களா என கேட்டார்.
 
பின்னர் அவரை பார்க்க சென்றேன். அங்கு அவர் என்னிடம் தவறாக நடக்க முற்பட்டார். உல்லாசமாக இருக்கலாம் என கூச்சமில்லாமல் அழைத்தார். பயந்துபோன நான் அங்கிருந்து வந்துவிட்டேன் என கூறினார். ஆனால் அந்த இயக்குனரின் பெயரை அவர் கூறவில்லை.