வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (14:39 IST)

அடேங்கப்பா....ஒரு கப் டீ ரூ. 13, 800 - வைரல் தகவல்

தேனீரை கண்டுபிடித்த காலத்திலிருந்து இன்று வரை மக்கள் எல்லோரும் காலை எழுந்ததும் டீ, டென்சனுக்கு டீ, ஜாலியாக இருந்தால் டீ என்று சகட்டுக்கு மேனிக்கு துக்கத்திலும் சந்தோஷத்திலும் டீ குடித்து வருவதை ஒரு பேஷனாகவே வைத்துள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஒரு கப் டீ நம் இந்திய மதிப்பில் சுமார் 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படுவதா தகவல் வெளியாகிறது. இதனைக் கேள்விப்பட்ட நம்மூர் மக்கள் எல்லாம் வாயை பிளக்காத குறைதான்.
 
அதேசமயம், பக்கிங் காம் அரண்மனைக்கு எதிரே உள்ள தி ரூபென்ஸ் என்ற ஓட்டலில் மிகக் குறைந்த விலையில் டி விற்கப்படுகிறதாகவும், அதும் நம் இந்திய மதிப்பில் ரூ. 200 டாலர் என்றும் தகவல் தெரிவிக்கிறது.
 
மேலும் இந்த டீ தூள் தயாரிப்பதற்கு முன்னரே, தேயிலைகள் விலையுயர்ந்த வெல்வெட் துணியில் உலர்த்தப்பட்டு பின்னர், இந்த ஹோட்டலுக்கு வரவழைக்கப்படுவதாகவும் அதனால் ஒருகப்  டீ முக அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் தெரிகிறது. முக்கியமாக  இந்த டீ வெள்ளிக்கிண்ணத்தில் வைத்து வழங்கப்படுகிறது.
 
எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு டீ விற்றாலும் கூட , அதனை ருசித்து பார்த்த ஆட்கள் உலகில் இல்லாமல என்ன...? ஆனால் இந்த விலைக்கும் வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.