வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (18:14 IST)

நீச்சல் குளத்தில் தவறி விழுந்த குழந்தை...3 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்பு!

child
கனடா நாட்டில் உள்ள பெட்ரோலியா நகரத்தில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த குழந்தையின் இதயத்துடிப்பு மீண்டுள்ள சம்பவம் ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள பெட்ரோலியா நகரில் குழந்தைகள் பாதுகாப்பு மைய இன்று இயங்கி வருகிறது.

இங்கு, 20 மாதக் குழந்தை நீச்சல் குளத்திற்குள் தவறி விழுந்தது. இதை மையத்தில் இருந்து பாதுகாவலர்கள் யாரும் அப்போது பார்க்கவில்லை.

பின்னர், 5 நிமிடங்களுக்குப் பின்னர், அக்குழந்தையை நீச்சம் குளத்தில் இருந்து மீட்டனர்.

குழந்தையின் வாய்க்குள்  நீர் சென்று மயக்கம் அடைந்ததால், ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டும் பலன் இல்லாததால், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள், குழந்தையைப் பரிசோதித்து, சிபிஆர் சிகிச்சையை செய்யத் தொடங்கினர். சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு கொண்டு வரக்கூடிய இச்சிகிச்சையில் மூலம் 3 மணி நேரத்திற்குப் பின் குழந்தையின் இதயத்துடிப்பு மீண்டும் துடித்தது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, குழந்தையை மீட்ட மருத்துவர்களுக்கு பெற்றோரும், மக்களும் பாராட்டுகள் கூறி வருகின்றனர்.