ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 31 மே 2020 (08:11 IST)

கருப்பின இளைஞரை கொன்ற போலீஸ்: கலவர பூமியாக மாறிய அமெரிக்கா!

கருப்பின இளைஞரை கொன்ற போலீஸ்
அமெரிக்கா ஏற்கனவே கொரோனா வைரஸால் படு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கருப்பின இளைஞர் ஒருவரை போலீசார் கொலை செய்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பதட்டத்தை ஏற்பட்டுள்ளது 
 
அமெரிக்காவில் உள்ள மின்னபொலிஸ் என்ற நகரில் கடந்த 25ஆம் தேதி கருப்பின இளைஞர் ஒருவரை விசாரணை செய்த போலீசார் அவரை கீழே தள்ளி கழுத்தில் காலால் நசுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கருப்பின இளைஞரை கொலை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டங்கள் வெடித்தன. நாடு முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் கருப்பின இளைஞரை கொலை செய்த போலீசாரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் கருப்பினத்தவர்கள் போராட்டங்களை தொடர்ந்து செய்து வருவதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போராட்டக்காரர்கள் தீ வைத்து உள்ளதாகவும் அந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. கருப்பின மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினரை ஈடுபடுத்த அமெரிக்கா முடிவு செய்து இருப்பதாகவும் இதனால் அந்நாட்டில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன