வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2016 (17:09 IST)

ஆயிரத்தில் பாதி எடை கொண்ட பெண்

எகிப்தில் 500 கிலோ எடைக்கொண்ட பெண் உலகின் குண்டான பெண்ணாக பெயர் பெற்றுள்ளார். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
எகிப்தில் உள்ள அலெக் சாண்டிரியாவை சேர்ந்த பெண் இமான் அகமது அப்துல்லாதி(36) என்பவர் 500 கிலோ உடல் எடையுடன் உள்ளார்.
 
இதன் மூலம் உலகின் மிக குண்டான பெண் என கருதப்படுகிறார். பள்ளிப்பருவத்திலே உடல் எடை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பள்ளிப்படிப்பை பாதிலேயே நிறுத்தியுள்ளார். அதோடு கடந்த 25 ஆண்டுகளாக படுக்கையில் இருக்கிறார்.
 
உணவு சாப்பிடுதல் போன்ற அனைத்து தேவைகளுக்கும் அவரது தாய் மற்றும் தங்கை உதவி செய்து வருகின்றனர். யானைக்கால் நோய் தாக்கியதுதான் அவரது உடல் எடை அதிகரிப்பு காரணம் என்று கூறப்படுகிறது.