வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 2 ஜூலை 2015 (05:23 IST)

ரம்ஜான் நோன்பு கடைபிடிக்காத 5 பேர் படுகொலை: ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறிச் செயல்

சிரியாவில், ரம்ஜான் நோன்பு கடைபிடிக்காத 5 பேரை கொடூரமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.
 

 
இது குறித்து, சிரியா மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த திங்கள் கிழமை அன்று அல்-மையடின் நகரத்தில் கொடூரமாகச் சிதைக்கப்பட்ட நிலையில் 5 உடல் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த உடல்களில் உள்ள கழுத்தில் ஒரு சீட்டு கட்டப்பட்டு, அதில் சில தகவல்கள் எழுதப்பட்டு இருந்தது.
 
அந்தச் சீட்டில், ரம்ஜான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்காத காரணத்தால், இவர்களை ஒரு நாள் முழுவதும் சித்ரவதை செய்து, பின்பு 70 சவுக்கடிகள் தண்டனையாக கொடுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
 
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் காரணமாக, அங்கு உதுவரை சுமார் 3,027 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகச் சிரியா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.