செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (12:12 IST)

நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க்: நோக்கியா நிறுவனத்தின் மாஸ் திட்டம்

Moon earth
நிலவில் 4ஜி நெட்வொர்க் அமைக்க நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பூமியில் தான் தற்போது 4ஜி, 5ஜி என நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.  இந்த நிலையில் நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் வருங்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
நிலவில் தகவல் தொடர்பினை மேம்படுத்த பரந்த அளவிலான நிலவின் கண்டுபிடிப்புகளை எளிதாக்க இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும் என நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
நிலவில் 4ஜி நெட்வொர்க் என்பது எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் விண்வெளி தொடர்பு துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை சாதிக்க முடியும் என்றும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
நிலவில் நெட்வொர்க் அமைப்பதன் மூலம் நிலவை ஆய்வு செய்யவும் புதிய கண்டுபிடிப்புகளை பெறவும் முடியும் என்றும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva